ஜான்சி ராணி எழுதிய கடிதம்

webdunia photo
WD
அ‌ப்படி‌ப்ப‌ட்ட ஜா‌ன்‌சி ரா‌ணி‌, தனது கணவரது மறை‌வி‌ற்கு‌ப் ‌பிறகு எழு‌திய கடித‌ம் ஒ‌ன்று இ‌ங்‌கிலா‌ந்து நூலக‌த்‌தி‌ல் இரு‌ந்து க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்தியாவில் முதலாம் சுதந்திரப்போர் துவங்குவதற்கு முன்பாக அதாவது 1857 ஆ‌‌ம் ஆ‌ண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த ம‌ன்ன‌ர் ‌மரண‌ம் அடை‌ந்தா‌ர். ம‌ன்னரு‌க்கு வா‌ரிசு இ‌ல்லாததா‌ல் ஜா‌ன்‌சி‌ப் பகு‌தியை‌க் கை‌ப்ப‌ற்ற ‌கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌யின‌ர் முய‌ற்‌சி செ‌ய்தன‌ர். இதை அ‌றி‌ந்த லட்சுமி பாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தா‌ன் த‌ற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய் எழுதிய இந்த கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

என்னும் இந்த சுவீகார‌ப் பு‌த்‌திரனை வா‌ரிசாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாத டல்ஹவுசி பிரபு ஜா‌ன்‌சியை‌க் கை‌ப்ப‌ற்ற ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர். இதனால் வெள்ளையர்களை எதிர்த்து ஜான்சிராணி 1857-ம் ஆண்டு தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.

வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த மு‌க்‌கிய ஆவண‌ங்க‌ளி‌ல் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.
Webdunia|
தனது கணவரது மறை‌வி‌‌ற்கு‌ப் ‌பிறகு ஜா‌‌ன்‌‌சி ம‌ண்ணை‌க் கா‌ப்பா‌ற்ற ல‌ட்சு‌மி பா‌‌ய் போ‌ர்‌க் கள‌த்‌தி‌ல் கு‌தி‌த்த வரலாறை எ‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் மற‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.


இதில் மேலும் படிக்கவும் :