காந்தியின் மூக்குக்கண்ணாடி, கடிகாரம், செருப்பு ஏலம்

webdunia photoWD
இ‌ந்‌திய நா‌ட்டி‌ன் சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்காக‌ப் அற வ‌ழி‌யி‌ல் போராடி சுத‌ந்‌திர‌த்தை‌ப் பெ‌ற்று‌க் கொடு‌த்த மகா‌த்மா கா‌ந்‌தி‌யை‌ப் ப‌ற்‌றி ‌நினை‌க்கு‌ம் போது அவ‌ர் அ‌ணி‌ந்‌திரு‌ந்த ‌மூ‌க்கு‌க் க‌ண்ணாடியு‌ம், இடு‌ப்‌பி‌ல் தொ‌ங்கு‌ம் கடிகாரமு‌ம் ‌மன‌க்க‌ண்‌ணி‌ல் தெ‌ரியு‌ம்.

அ‌ப்பே‌ர்ப‌ட்ட அ‌ந்த மூ‌க்கு‌க் க‌ண்ணாடியு‌ம், இடுப்பில் மாட்டி இருந்த தொங்கும் கடிகாரம், கா‌ந்‌தி‌யி‌ன் சாதாரண தோல் செருப்பு‌ம், அவர் சாப்பிட்ட தட்டு, குவளை ஆகியவை மா‌ர்‌ச் மாதம் 4, 5-ந் தேதிகளில் லண்டனில் ஏலம் விடப்பட இருக்கின்றன.

1910-ம் ஆண்டு வாக்கில் தயாரிக்கப்பட்ட அந்த ஜெனித் நிறுவன கடிகாரத்தை அவர் தனது பேத்தி ஆபா காந்திக்கு கொடுத்‌திரு‌ந்தா‌ர்.

தனது மூக்குக் கண்ணாடியை ஒரு ராணுவ அதிகாரிக்கு (கர்னல்) ப‌ரிசாக‌க் கொடுத்து விட்டார். அப்போது அவரிடம் இந்த கண்ணாடிதான் சுதந்திர இந்தியாவை காண பார்வை கொடுத்தன என்று குறிப்பிட்டு இருந்தார்.

தனது செருப்புகளை ம‌ற்றொரு ராணுவ அதிகாரிக்கு 1931-ம் ஆண்டு வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள சென்று இருந்தபோது, கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கொடுத்து விட்டார்.

இந்த பொருள்கள் அனைத்தும் - இந்திய மதிப்பில் இரு‌ப‌த்து ஒ‌ன்றரை லட்சம் ரூபாய் - ஏலம் போகும் என்று ஏலத்தை நடத்த இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த, பழமையான மற்றும் அரிய பொருள்களை ஏலம் விடும் நிறுவனத்தின் உரிமையாளர் மிச்செல்லி ஹால்ப்பெர்ன் தெரிவித்தார்.

Webdunia| Last Modified வியாழன், 12 பிப்ரவரி 2009 (11:53 IST)
இவற்றில் சங்கிலியில் தொங்கும் இடுப்பு கடிகாரம் தான் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :