வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 31 அக்டோபர் 2015 (17:41 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை விரைவடையும். பூர்வீக சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக வாகனம், டி.வி., ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள்.
 
உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என வருந்துவீர்கள்.
 
அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிசயிக்கும் படி சிலவற்றை செய்வீர்கள்.
 
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும்.
 
கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்த வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 2, 6, 7, 16, 25 
அதிஷ்ட எண்கள்: 3, 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், இளம் சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்