அ‌க்டோப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29

Webdunia| Last Modified வெள்ளி, 30 செப்டம்பர் 2011 (20:57 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும்.

அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறையுங்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனப் பழுது வந்து நீங்கும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 5, 10, 14, 17, 23, 28
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : மெருண், ஆலிவ் பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன்


இதில் மேலும் படிக்கவும் :