அ‌க்டோப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28

Webdunia| Last Modified வெள்ளி, 30 செப்டம்பர் 2011 (21:02 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிரடி சலுகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊரியர்களிடம் கவனமாக பழகுங்கள். கலைத்துறையினர்கள் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சிக்கல்களில் இருந்து விடுபடுவதுடன் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 6, 11, 15, 19, 24, 29
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி


இதில் மேலும் படிக்கவும் :