வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. அசைவம்
Written By Webdunia

கொத்துக்கறி இட்லி

FILE
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி

தேவையானவை

கொத்துக்கறி - தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப்
தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

FILE
செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொத்துக்கறியையும் போட்டு நன்றாக வதக்கவும்.

இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைக்கவும், கொத்துக்கறி நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி தனியே வைக்கவும்.

இட்லி தட்டில் சிறிதளவு மாவை ஊற்றி கொத்துக்கறி கலவையை அதன்மீது போடவும். பின்னர் இந்த கொத்துக்கறி கலவை மீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும் (மாவை ஊற்றும் போது கொத்துக்கறி மசாலா வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்ளவும்)

இந்த இட்லிகளை ஆவியில் வைத்து எடுத்தால் சுவையான கொத்துக்கறி இட்லி தயார். இட்லியையும், கொத்துக்கறியையும் தனியாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடும்போது சுவை அதிகமாக இருக்கும்.