வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 23 மே 2015 (09:48 IST)

இறால் கட்லெட்

தேவையான பொருட்கள்
 
இறால் - அரை கிலோ
தேங்காய் - ஒன்று
ரொட்டித் தூள் - 1 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
 
செய்யும் முறை
 
இறாலை தோல் உரித்து அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சையாக அரைப்பதை விட கொஞ்சம் நீரில் போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு எடுத்து அரைப்பது எளிதாக இருக்கும்.
 
தேங்காயைத் துருவவும். வெங்காயத்தை தட்டி வைக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசையவும். அதில் அரைத்து வைத்திருக்கும் இறாலைச் சேர்க்கவும்.
 
மாவு பதத்திற்கு வந்ததும் கட்லட்டாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு லேசாகச் சிவக்கும் அளவுக்கு வேகவிட்டு எடுக்கவும்.