வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்

குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
வெங்காயத் தாள் - 4 பொடியாக நறுக்கியது
மிளகாய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
கறிமாசாலா - 1 ஸ்பூன்
தக்காளி விழுது - 1 ஸ்பூன்
சீரக தூள், சர்க்கரை - 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
* பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.
 
* சிக்கனை சிக்கன் 65 செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
 
* மிளகாய் விழுது தயார் செய்ய அவற்றை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 
* கடாயில் எண்ணெய் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். பின்னர் உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும் சிக்கன் பொடியாக நறுக்கியதை சேர்க்கவும்.
 
* கடைசியாக சாதம், மிளகுத் தூள், தக்காளி சாஸ், சீரகத் தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக கொத்தமல்லி, வெங்காயத் தாளை தூவி இறக்கவும்.