சிக்கன் மிர்ச்சி ரொட்டி

Webdunia|
வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு உண்டு மகிழ சிக்கன் மிர்ச்சி ரொட்டி ஒரு சிறந்த அசைவ உணவாகும்

தேவையானவை

சிக்கன் - 1 கிலோ
மிளகு (பொடித்தது) - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
தனியா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பூண்டு - 10
லவங்கம் - 5
கறிவேப்பிலை - சிறிதுகோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் ,உப்பு - தேவைகேற்ப

செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து,மிளகு தூள், மஞ்சள் தூள்,உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும்.

வானலியில் எண்ணெய் ஊற்றி லவங்கம், பூண்டு, வெங்காயம்,கறிவேப்பிலை,தக்காளியுடன் தனியா தூள் சேர்த்து வதக்கவும்.கலவை கெட்டிப்பட்டதும் ஊறவைத்த சிக்கன்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி சிக்கன் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
தயார் செய்த கலவையை சப்பாத்திகளுக்கு நடுவே வைத்து பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :