கோழி பொடிமாஸ்

Webdunia|
கோழிக்கறியில் குருமா செய்திருப்பீர்கள். வருவல் செய்திருப்பீர்கள். பொடிமாஸ் செய்திருக்கிறீர்களா? எப்படி செய்வதென்று கேட்கிறீர்களா?

தேவையானப் பொருட்கள்:

அரை கிலோ பொடியாக கோழிததுண்டுகள்
பதினைந்து சின்ன வெங்காயம்
ஐந்து பச்சை மிளகாய்
அரை கப் எண்ணெ‌ய
இரண்டு கொத்து கறிவேப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு
ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து
அரை டீஸ்பூன் சீரகம்
ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
நாலு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
தேவையான அளவு உப்பு

செய்முறை:
கோழித்துண்டுகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வேகவைத்த கோழித்துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.

பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப் பருப்பு தாளிக்கவும்.
எல்லாம் நன்கு சிவந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு கோழித் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :