கெளுத்தி கபாப் ஃப்ரை

Webdunia| Last Modified செவ்வாய், 18 டிசம்பர் 2012 (14:06 IST)
கெளுத்தி மீன் வறுப்பதற்கு உகந்த மீன் வகையாகும். கெளுத்தி மீனை இங்கே குறிப்பிட்டிருக்கும் முறையில் சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.

தேவையானவை:

கெளுத்தி மீன் - 1 கிலோ
மசித்த இஞ்சி - 2 ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 3 ஸ்பூன்
தனியாதூள் - 4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
முட்டை - 1எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு, தனியாதூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தயிர், முட்டை மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து அதில் மீன் துண்டுகளை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
மசாலாவுடன் கலந்த மீனை தவாவில் எண்ணெய் விட்டு பொரித்தால் சுவையான கெளுத்தி கபாப் ஃப்ரை ரெடி.


இதில் மேலும் படிக்கவும் :