இறால் வடை

Webdunia|
FILE
இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாகும். இறாலில் வடை எப்படி செய்யமுடியும் என குழம்பி இருப்பவர்கள், ஒரு முறை இந்த உணவை செய்து சுவைத்தால், தினமும் உங்கள் வீட்டில் இறால் வடைதான்.

தேவையானவை

இறால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவைகேற்ப
வெங்காயம் - 1/2 கப்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை

துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

சுத்தம் செய்த இறால்களை தனியாக அரைத்து, ஏற்கனவே அரைத்துவைத்த மசாலா கலவையுடன் கலக்கவும்.

இந்த கலவையில் தேவைகேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெய்யில் பொறித்தெடுத்தால் சுவையான இறால் வடை ரெடி


இதில் மேலும் படிக்கவும் :