இறால் பொரியல்

Webdunia| Last Modified செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (18:28 IST)
தேவையானவை:

இறால் - 500 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - 2 செ.மீ.
பூண்டு - 8 பல்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் - முக்கால் மூடி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - தாளிக்க

தயாரிக்கும் முறை:

இஞ்சி, பூண்டு, மிளகாயைச் சேர்த்து நன்கு அரைத்து உப்பைக் கலந்து இறாலில் பிசறி வைக்கவும்.
தேங்காயை சிறு துண்டுகளாக்கி இதனுடன் சேர்க்கவும். வெங்காயத்தை மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும்.

வெங்காயம் சற்றே நியம் மாறியதும் இறாலைப் போட்டு வதக்கவும். இறாலும் சிவந்த நிறத்திற்கு மாறும்.
பின்னர், சிறிது தண்ணீர் விட்டு இறாலை வேகவிட்டு இறக்கவும்.

தேவைப்பட்டால் கடைசியாக, இரண்டு தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு வதக்கி இறக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :