இறால் பூண்டு மசால்

Webdunia|
இறால் பூண்டு மசால

தேவையாவை

இறால் - ½ கிலோ
வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 30
எலுமிச்சை சாறு - சிறிது
நல்லெண்ணை - தேவைகேற்உப்பு - தேவைகேற்
கடுகு, உளுந்து,கறிவேப்பிலை - சிறிது


மசாலாவிற்கு....

காய்ந்த மிளகாய் - 4, தனியா- 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன
செய்முறை

இறாலை நன்றாக சுத்தம் செய்து எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்

மசாலாவிற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து, 10 பூண்டு பற்களோடு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதோடு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மீதமுள்ள பூண்டு, மசாலா அரவை ஆகியவற்றுடன் இறாலை சேர்க்கவும் .
மசாலா தொக்கு பதத்திற்கு வரும்வரை கடாயை மூடாமல் சமைக்கவும், மசாலா கெட்டிப்படும்போது தேவைகேற்ப உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :