இத்தனை அற்புத பயன்களை கொண்டதா ஆரஞ்சு பழத்தோல்...?

Sasikala|
ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாதிங்க, காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை கொண்டு நம் முக அழகை அதிகரிக்க முடியும். அதுமட்டும் இல்லாமல் ஆரஞ்சு பழத்தோல் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், இவற்றை நம் முகத்தில் பேக்காக போடும்போது முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது.

வினிகரில் ஆரஞ்சு தோலை ஊற வைத்து அதைப் பயன்படுத்தினால் வாசனை நிறைந்த அதேசமயம் கெமிக்கல் அல்லாத துடைக்கும் லிக்விடாகப் பயன்படுத்தலாம். இந்தக் கலவையை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி கிச்சன், கண்ணாடி பொருட்கள், மிக்ஸி என துடைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
துர்நாற்றம் வீசக்கூடிய இடத்தில் ஆரஞ்சு தோலை வைத்தால் துர்நாற்றம் நீங்கும். உதாரணத்திற்கு ஷூ கடுமையான துர்நாற்றம் வீசுகிறதெனில் ஷூவிற்குள்  வைக்கலாம். ஃபிரிட்ஜ் துர்நாற்றமாக இருந்தால் அதிலும் ஆரஞ்சு தோலில் உப்பு தடவி வைக்கலாம்.
 
வீட்டிற்கு சாம்பிராணி புகை போட்டால் அதில் ஆரஞ்சு தோலையும் அப்படியே போட்டால் நல்ல நறுமணம் கிடைக்கும்.
 
ஆடைகளில் எண்ணெய் கறை, கிரீஸ், பிசுபிசுப்புக் கறைகள், பூமர் ஒட்டியிருந்தால் அவற்றை நீக்க ஆரஞ்சு தோலை சோப்பு ஆயில் அல்லது சர்ஃப் பவுடர் தண்ணீரில் ஊறவைத்து அதில் பிசுபிசுப்பு கொண்ட துணியை ஊற வையுங்கள்.
 
கண்ணாடி பொருட்கள், கண்ணாடி பாத்திரங்களில் உள்ள பிசுக்குகளை நீக்கவும் ஆரஞ்சு தோலை தேய்க்கலாம்.
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த ஆரஞ்சு பழத்தை முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் ஏற்படும் பருக்களை தடுப்பதற்கு மிகவும் உதவுகிறது.
 
ஆரஞ்சு தோலை பவுடராக்கி அதில் தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்தால் முகம் பளபளக்கும்.
 
ஆரஞ்சு தோலை இரவு ஊறவைத்து அந்த தண்ணீரை தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :