வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்ன? எதற்கெல்லாம் பயன்படுகிறது...?

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில்  தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
 
குழந்தை பேறுக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு செவ்வாழை அருமருந்தாகும். அவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன்  தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது.
 
ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட பலன்  கிடைக்கும்.
 
உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
 
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும்,  செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
 
கண் பார்வையால பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு  ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.