கடுகு எண்ணெய் உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...?

நம் அன்றாட உணவில் பல வகையான எண்ணெய்களை பயன்படுகிறோம். அதில் வெகு சிலர் மட்டுமே மிகவும் குறைந்த அளவில்  பயன்படுத்தும் எண்ணெய்யாக கடுகு எண்ணெய் இருக்கிறது. இந்த கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு  தெரிந்து கொள்ளலாம். 
கடுகு எண்ணெய் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றதிறனை அதிகரித்து ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டுகிறது. பசியுணர்வு  குறைவாக உள்ள நபர்கள் அடிக்கடி கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பசியுணர்வு அதிகம்  தூண்டப்பட்டு உணவுகளை சாப்பிடும் ஆர்வம் உண்டாகும். 
 
காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை கடுகு  எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில்  அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் கடுகு எண்ணெயை தடவி வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
 
பாத நோய்கள் நாம் வெறுங்கால்களோடு நடப்பதால் பூமியில் இருக்கும் சில கிருமிகள் தொற்று சிலருக்கு ஏற்படுவதால் பாத புண்கள்  ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை  ஏற்படுகின்றன.
 
செரிமான சக்தி பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்  கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்களை அவ்வப்போது சிறிதளவு சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு  சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள். 
 
கடுகு எண்ணெய்யை உடலுக்கு மேல் மற்றும் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல், வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில்  எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.
 
சொரியாசிஸ் தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் கடுகு எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப  எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்சனையை  குணப்படுத்தலாம். 
 
தலைமுடி தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம். கடுகு எண்ணையை தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க  வேண்டும். மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள்  நீங்கும். 
 
சைனஸ் என்பது நமது மூக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஜலதோஷம் பீடிக்கும் போது சேர்ந்து கொள்ளும் ஒரு திரவ நிலையில்  இருக்கும் கோழை ஆகும். இந்த சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கடுகு எண்ணெயின் 2 துளிகள்  மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும். 
 
விஷ பூச்சிகளின் கடியால் ஏற்பட்ட விஷம் முறிய கடிபட்ட இடத்தில் கடுகு எண்ணெய்யை தேய்ப்பதால் பூச்சி, வண்டு கடிகளின் விஷம்  முறியும். 
 
கடுகு எண்ணையை அடிக்கடி உணவில் சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :