வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (21:56 IST)

தீராத இருமலை போக்க... சிறந்த வழிமுறைகள்

மழைக்காலம் வந்துவிட்டால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருமல் போட்டு வாட்டி வதைத்துவிடும்.
 

 
பேசினால் இருமல் வருகிறது, சிரித்தால் இருமல் வருகிறது, குளிர் அடித்தால் இருமல் வருகிறது. இப்படி சகலத்துக்கும் இருமல் வருகிறது என்று புலம்பும் அளவிற்கு இருமல் பாடாய் படுத்தும். அதற்கான சிறந்த வழிமுறைகள் நம் கைகளிலேயே இருக்கிறது.
 
சுத்தமான, மஞ்சள் (2 கிராம்) போட்டு காய்ச்சிய பாலை தினமும் 2 வேளை, 15 நாட்கள் குடித்து வரவும். கிருமி நாசினியான மஞ்சள், இருமலை தூண்டும் பாக்டீரியாவை தாக்கும்.
 
இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும்.
 
பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும்.
 
இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

நாட்பட்ட இருமலுக்கு பூண்டை (2 பல்) நசுக்கி, ஒரு டம்ளர் பாலிலிட்டு காய்ச்சவும். பாதியாக சுண்டியதும், வடிகட்டி சர்க்கரை சேர்த்து தினமும் 2 வேளை குடிக்கவும். அதிக அமில சுரப்பினால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஷாயத்தை தவிர்க்கவும்.
 

 
வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.
 
வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது.

மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.
 
தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங்கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். 
 
துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
 
வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது.
 
மிளகுக்கு அதீத மருத்துவ சக்தி உள்ளது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்.