மருத்துவ குணங்கள் நிறைந்த சோம்புவின் பயன்கள்!

சோம்பு உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் சேர்த்து செய்கின்றது. சுவாச பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சமையலறை மருந்தாக சோம்பு விளங்குகிறது.
நாம் சாப்பிடும் சில உணவுகள் உடனே செரிக்காமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும், மேலும் சிறு குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த சமையங்களில் சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொடுத்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.
 
குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு, சில சமயங்களில் குறைந்து விடும். தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
பொதுவாக நாம் அசைவ உணவுகளை சாப்பிடும்போது அனைவருக்கும் வாய் துர்நாற்றம் அடிக்கும். அந்த நேரத்தில் பெருஞ்சீரகத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் இந்த வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
 
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த பெருஞ்சீரகம் இருக்கின்றது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. சோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.
 
உடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.
 
சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெறும் வாயில் போடு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை சரி செய்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :