எருக்கஞ்செடியின் அற்புத மருத்துவ குறிப்புக்கள்.....!!

Erukkan plant
Sasikala|
காலில் முள் தைத்தால், அந்த இடத்தில் எருக்கன் இலையை உடைத்து அதிலிருந்து வரும் பாலை முள் தைத்த இடத்தில் விட்டால், அந்த முள்ளானது முற்றிலுமாக வெளியேறிவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். 
பாம்பு கடித்தால் கூட அந்த விஷத்தை முறிப்பதற்கு முதலுதவி சிகிச்சையாக இந்த எருக்கன் இலையை அரைத்து கோலி குண்டு அளவு  விழுங்கினால் விஷம் இறங்கும். தேள் கடித்தால் இதேபோன்று சுண்டைக்காய் அளவு கொடுக்க வேண்டும். கடித்த இடத்தில் எருக்கன்  இலையை வைத்து கட்டினால் விஷம் இறங்கும். இதன் பிறகு மருத்துவரிடம் செல்லலாம். 
 
வெள்ளை எருக்கன் பூ கிடைப்பது அரிதான ஒன்று. இந்த வெள்ளெருக்கம் பூக்களில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, அந்த இதழ்களை மட்டும் நம் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இதழ்களின் சம அளவிற்கு மிளகு, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு மிளகு  அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது அதில் ஒன்றை  வாயில் போட்டுக் கொண்டு நீரை அருந்தினால் உடனே இரைப்பு தணியும். 
 
எருக்கன் பூவைக் காயவைத்து பொடியாக நறுக்கி, அந்த பொடியில் 200 கிராம் எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய், தொழுநோய் குணமடையும். 
 
எருக்கன் செடியின் வேரை நெருப்பில் சுட்டு கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து நம் தோலின் மேல் பூசிவர ஆறாத காயங்களும் ஆறும். பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டு வீக்கம், மூலநோய்க்கு சிறந்த மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. 
 
சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி என்ற மாத்திரை எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாக  வழங்கப்படுகிறது. 
 
எருக்கன் இலைகளை எரித்து அந்தப் புகையை வாய் வழியாக சுவாசித்தால் மார்பு சளி கரையும். 
 
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி நம் தோல் பொறுக்கும் அளவில் உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டிகள் பழுத்து  உடைந்து விடும். 
 
எருக்கன் இலை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர குடலில் உள்ள புழுக்கள் முழுவதுமாக வெளியேறி வயிறு சுத்தப்படுத்தப்படும்.  பசியைத் தூண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :