மூலிகை மருத்துவத்தில் அற்புத பலன் தரும் குப்பைமேனி இலை...!!

Sasikala|
குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலிலி  இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. 

தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.
 
குப்பைமேனி இலைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்ததாகும். குப்பைமேனி  இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம்  ஏற்படும். 
 
ரசாயனங்கள் நிறைந்த மருந்துகளை புண்களுக்கு தடவுவதற்கு பதிலாக குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே ஆறும். தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும்.
 
அரை டீஸ்பூன் குப்பைமேனி சாறுடன், உப்பு கலந்து பருக நெஞ்சில் இருக்கும் சளியை வெளியேற்றும். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது வாந்தியுடன் சளி வெளியேறும். வாரத்திற்கு இரு முறை கொடுக்கலாம்.
 
குப்பைமேனியை, சுண்ணாம்புடன் கலந்து போட வீக்கம் குறையும், விஷத்தை முறிக்கும் புண்ணுக்கும் போடலாம். குப்பைமேனியை விளக்கெண்ணெய்யில் வதக்கி  மூட்டு வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போடும்போது வலியை குறைக்கும், வீக்கத்தை குறைக்கும்.
 
நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில்  சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள  சர்க்கரையின் அளவை குறைக்கும்.
 
குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது  போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :