வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (18:14 IST)

அடுப்பில்லாமலும் சமையல் செய்யலாம்

உடலுக்கு சமைத்த உணவுகளை காட்டிலும், சமைக்காத உணவில் அதிக சத்துக்கள் உள்ளன.


 

 
பேரீச்சைச் சாறு:
பேரிச்சம் பழத்தைக் கழுவி, குறைந்தது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், பின்னர் பிசைந்து வடி கட்டிக் கொள்ள வேண்டும். 
 
அளவு: 200 மி.லி. தண்ணீருக்கு (ஒரு டம்ளர்) 3 பேரீச்சம்பழம்.
 
எலுமிச்சை பானகம்:
ஓர் எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 டம்ளர் தண்ணீர் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் 50 கிராம் சேர்த்து அத்துடன் வாசனைக்காக 4 ஏலக்காய்களைத் தூள் செய்து போட்டுக் கொள்ளலாம்.
 
அவல் பாயசம்:
அவலைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, கனிந்த மொந்தன்பழம் சேர்த்துப் பிசைந்து தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். சிறிது ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு, காய்ந்த திராட்சை சேர்க்கலாம். 
 
அளவு: 5 பேர்க்கு அவல் 100 கிராம், தேங்காய்1, மொந்தன் பழம் 3, சர்க்கரை 50 கிராம், முந்திரிப் பருப்பு 10, காய்ந்த திராட்சை 15, ஏலக்காய் 5.
 
கேரட் கீர்:
கேரட் துருவலை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஆட்டிச் சாறு எடுத்து, அத்துடன் தேங்காய்ப்பால், நாட்டுடுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். வாசனைக்காக ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.
 
அளவு:
5 பேர்க்கு கேரட் 500 கிராம், பெரிய தெங்காய் 1, நாட்டுச் ச்ர்க்கரை 100 கிராம், ஏலக்காய் 10, பச்சைக் கற்பூரம் 4 சிட்டிகை.
 
கேரட் அல்வா:
கேரட் சக்கையுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்தால் அல்வா தயார்.