வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாரம் இருமுறை உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...?

முள்ளங்கி, முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.

முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும்  மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
 
முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
 
இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
 
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
 
இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும். இந்த முள்ளங்கியால் வாதநோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.
 
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.