வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2014 (17:43 IST)

விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம்... ஆனால் பேசுவதோ கிரிக்கெட் - சரத்பவார் மீது மோடி ஆவேசம்

மகாராட்டிர மாநிலம் அமராவதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சரத் பவார் மீது நெருப்பை உமிழ்ந்தார்.
இந்த நாட்டின் சாதாரண மக்களின் நிலையை குறித்து காங்கிரசுக்கு தெரியவில்லை. ஏழைகள் குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. இந்த நாட்டின் வேளாண்துறை அமைச்சர் கிரிக்கெட் குறித்து பேசி வருகிறார். ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் குறித்து அவர் பேச மறுக்கிறார். 
 
மகாராஷ்ட்டிராவில் இருந்து தேசியவாத காங்கிரசும், இந்தியாவில் இருந்து காங்கிரசும் விரட்டப்பட வேண்டும். வரும் தேர்தலுக்கு பின்னர் ஏப். 16ம் தேதி காங்கிரசின் நிலை தெரிந்து விடும். காணாமல் போய் விடும். 

மகாராஷ்ட்டிராவில் பருத்தி விவசாயிகள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். குஜராத்திலும் பருத்தி விவசாயம் உண்டு ஆனால் யாரும் இங்கு தற்கொலை செய்வதில்லை. 
 
பருத்தி, மற்றும் விவசாய பொருட்களுக்கு மானியம் உரிய முறையில் வழங்கபட்படவில்லை. ஆனால் இறைச்சி ஏற்றுமதிக்கு மானியம் வழங்கப்படுகிறது.

உதவியற்றவர்களாக இருப்பதற்கும், வேலை இல்லாமல் இருப்பதற்கும், விலைவாசி உயர்வுக்கும் யார் காரணம் ? என (கூட்டத்தினரை பார்த்து கேட்டார்) - கூட்டத்தினர்- காங்கிரஸ் - என்று பதில் அளித்தனர். அப்படியானால் இந்த காங்கிரஸ் இல்லாத நாட்டை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.
 
இவ்வாறு பேசினார் மோடி.