வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

விநாயகர் சதுர்த்தியின் போது மும்பை ஏர்போர்ட்டை தகர்க்க திட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, மும்பை விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி தொடங்கி 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு புலனாய்வுத் துறை எச்சரிக்கை செய்திருந்தது.

துறையும், பாதுகாப்பு ஏஜென்சிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விமான நிலையம் .

FILE
அருகிலுள்ள ஓட்டல்களின் நிர்வாகிகள், கணபதி மண்டல்களின் பிரதிநிதிகள் ஆகியோரை, பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மண்டல போலீஸ் துணை கமிஷனர், ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, ஓட்டல்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வருபவர்களின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும், சந்தேகிக்கும்படியான நபர்களை பார்த்தால், அதுபற்றி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பை தொழில்துறை பாதுகாப்பு படையினர் கவனித்து வருகின்றனர். அவர்கள் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது