வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 27 ஏப்ரல் 2014 (17:12 IST)

ராஜேந்திர மால் லோதா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து ராஜேந்திர மால் லோதா புதிய தலைமை நீதிபதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ரத்தின் 41–வது தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா இன்று பதவியேற்றுக் கொண்டார். 
 
ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். 
 
64 வயதான ஆர்.எம். லோதா 5 மாதங்களே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார். செப்டம்பர் 27 ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். 
 
புதிய தலைமை நீதிபதியான அவர் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தார். 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். பின்னர் அங்கிருந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 
 
2008 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பாட்னா உயர் நீதிமற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியானார். தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.