செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 1 மே 2014 (16:57 IST)

மோடியை தோற்கடிக்க கெஜ்ரிவாலுக்கு ஆதரவு: ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடியை தோற்கடிக்க, கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிற்கிறார்.
 
மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராய் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
தொடக்கம் முதலே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இன்று மோடியை எதிர்த்து போட்டியிடும் கெஜ்ரிவாலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.