வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By ILAVARASAN
Last Modified: புதன், 21 மே 2014 (13:56 IST)

பாகிஸ்தானின் ஊடுருவல் தொடர்ந்தால் பழிக்குப் பழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் - உத்தவ் தாக்ரே

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் எண்ணத்தை கைவிட்டு பழிக்குப் பழியாக அந்நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். எல்லையில் பாகிஸ்தானின் ஊடுருவல் தொடர்ந்தால் பழிக்குப் பழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்ரே வலியுறுத்தியுள்ளார். சிவசேனா கட்சியின் இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
விளையாட்டை அரசியலாக்க கூடாது என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மக்களின் மனது காயப்படும் வகையில் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்புவிடுத்துள்ள நிலையில் இரு நாடுகளும் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் கருத்தை மோடி ஏற்றால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.