வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (17:22 IST)

பகத்சிங்கை அந்தமான் சிறைக்கு அனுப்பிய மோடி! இதோ ஒரு புதிய உளறல்!

இந்திய வரலாற்றை தப்பும் தவறுமாக உளறிக்கொட்டுவதில் மோடிக்கு நிகர் மோடிதான்.

கார்ப்பரேட் உதவியுடன் மக்களை வக்கு வங்கிகளாக்கும் உத்தியை கற்றுக் கொண்டு வரும் மோடிக்கு இந்திய வரலாற்றை யாராவது சொல்லிக் கொடுத்தால் நன்றாகவே இருக்கும்.

உளறல் இதோ: பகத் சிங் அந்தமான் சிறையில் நீண்ட காலம் சித்ரவதை அனுபவித்தாராம். உண்மையில் அந்தமான் சிறையில் இருந்தது அவர்கள் தலைவர் வீர் சவர்க்கரே!

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் 75ஆண்டுகள், அதாவது இந்தியா 2022-இல் என்ற 'தீர்க்கதரிசன' விவாதத்தில்தான் இந்த உளறல். ஓஹோ எதிர்காலம் பற்றியே மோடி ராப்பகலாக சிந்தித்து (?) வருவதால் கடந்த கால வரலாறு அவருக்கு ஒரு பொருட்டல்ல போலும்.

இந்திய சுதந்திரத்திற்காக உயிர்நீத்த தியாகிகளைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் அந்தமான் சிறைகளில் நீண்ட காலம் இருந்தனர் என்றார்.

"பகத் சிங்கையும் அவரது நண்பர்களையும் குறிப்பிடும்போது எனக்கு மயிர் சிலிர்க்கிறது. அவர்கள் ஏன் சிறையில் வாடவேண்டும்? அந்தமான் நிகோபார் தீவுகள் சிறையில் அவர்கள் ஏன் வாடியிருக்கவேண்டும்?" இது தான் மோடியின் உளறல்.

உண்மையில் ஏப்ரல் 8, 1929-இல் பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிறையிலேயே வைத்திருந்தனர். சிறிது காலம் கழித்து புரட்சிவீரர்கள் மியாவலி சிறைக்கு மாற்றப்படுகின்றனர். பிறகு லாகூர் சதி வழக்கில் லாகூர் சிறையில் 1931ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் பகத் சிங்.

தேர்தல் வருவதற்குள், ஏன் தேர்தல் முடிந்தாலும் கூட அவரது உளறலுக்கு முடிவு இருக்காது போலிருக்கிறதே!

என்ன இப்படி உளறிக்கொட்டுகிறாரே நீங்கள் ஆதரிக்கும் மோடி என்று சோ ராமசாமியிடம் கேட்டால், "அவர் நடத்திக்கொண்டிருக்கும் வேள்வி"-யில் அவருக்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்பார்.