1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

சுண்டல் விற்பது முதல் சடலம் எரிப்பது வரை 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலைகள்

ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் அவருக்கு விருப்பமான பணி எது என்பதை கண்டறிய 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலை செய்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
FILE

ஒடிசாவை சேர்ந்தவர் ஜுபனஷ்வா மிஸ்ரா. இவருக்கு வயது 29. இவர் இவரது பெற்றோர் விருப்பத்திற்காக பொறியியல் படித்து, பொறியாளராக 2 வருடம் பணிபுரிந்தார்.

பின்னர் தனக்கு எந்த வேலை பிடிக்குமென தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 28 மாநிலங்களில் தொடர்ந்து 28 வாரங்கள் 28 வேலைகளை செய்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வாரத்திற்கு ஒரு வேலை என்னும் திட்டத்தை இவர் வகுத்து அதனை வெற்றிகரமாக நடைமுறை படுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் சுண்டல் விற்கும் வேலை, ஹரியானாவில் புகைப்படக்காரர், அசாமில் டீ இலை தொழிலாளி வேலை என பல வேலைகளை பார்த்துள்ளார்.
FILE

டாட்டூ ஆர்டிஸ்ட் வேலை முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் சடலங்களை எரிக்கும் வேலை வரை அனைத்தையும் ஒவ்வொரு வாரங்களுக்கு செய்து பார்த்த ஜுபனஷ்வா மிஸ்ரா இறுதியில் தனக்கு மனதிற்கு பிடித்த வேலையை கண்டறிந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், இந்த பயணத்தை நான் மேற்கொண்டதற்கு முக்கிய காரணம் இளைய தலைமுறையினரை அவர்களது மனதிற்கு விருப்பமான பணியை செய்ய ஊக்கப்படுத்துவது தான். இந்த பயணத்தில் நான் மேற்கொண்ட மிக கடினமான வேலை ஐதராபாத்தில் ஒரு மழலையர் பள்ளியில் பணி புரிந்தது தான். குழந்தைகளுடன் பணி புரிவது கடினமாக இருந்தாலும் , அது தான் எனக்கு மன நிறைவை தந்தது, எனவே, நான் ஒரு மழலையர் பள்ளியை துவங்கவுள்ளேன். ஆனால், அப்பள்ளி பிற பள்ளிகளை போல மதிப்பெண் சார்ந்த கல்வி முறையை பின்பற்றாது என்றார்.

தற்போது தனது பயண அனுபவங்களையும், பயணத்தின்போது தான் சந்தித்த மக்களை பற்றியும் ஒரு புத்தகம் எழுதிவரும் ஜுபனஷ்வா மிஸ்ரா, தனது மனதிற்கு பிடித்த வேலையை செய்பவர்களே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.