1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By ILAVARASAN
Last Modified: புதன், 21 மே 2014 (11:28 IST)

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தேர்தல் தோல்வியால் கட்சியிலிருந்து ராஜினாமா

பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்ததால் கட்சி பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
 
36 வயதான கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராஷ்டிரிய ஆம் என்ற கட்சியை தொடங்கினார். அதில் துணை தலைவராகவும் பதவி வகித்தார். மேலும் வட மேற்கு மும்பை தொகுதியில், மிளகாய் சின்னத்தில் போட்டியிட்டார்.
 
ஆனால் தேர்தலில் 2 ஆயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காமல் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி நடிகை ராக்கி சாவந்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் அவர் ராஷ்டிரிய ஆம் கட்சி தலைவர் கிருஷ்ணலாலிற்கு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் என் சுய விருப்பத்தின் பேரில் கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும், இனி கட்சியின் எந்த ஒரு செயல்பாடுகளிலும் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த ராஜினாமா விவகாரம் குறித்து ராக்கி சாவந்தின் உதவியாளரும், மக்கள் தொடர்பாளருமான அஸ்பல் ஹீசேனிடம் கேட்ட போது, "தேர்தலின் போது ராக்கி சாவந்த் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து தொகுதி முழுவதும் சுற்றி பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தல் முடிவு அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. எனவே அவர் இனிமேல் தன் அழகை மெருகேற்ற அழகுநிலையம், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல உள்ளார்" என்று குறிப்பிட்டார்.
 
ராக்கி சாவந்த் பா.ஜகவில் இணைவாரா? என்று கேட்டதற்கு அவர் கருத்து கூற மறுத்து விட்டார். இருப்பினும் ராக்கி சாவந்த் பாஜகவில் இணையலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.