வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2014 (13:51 IST)

ஏ.டி.எம் கார்டு இல்லாமல் செல்போன் மூலம் பணம் எடுக்கலாம்: ஐசிஐசிஐ

ஏ.டி.எம். மையங்களில் இதுவரை கார்டுகளை பயன்படுத்தியே பணம் பெரும் வசதி நடைமுறையில் உள்ளது. ஆனால், செல்போன் எண் மூலம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த புதிய முறையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வங்கி கணக்கு இல்லாத ஒருவருக்கு பண பரிமாற்றம் செய்யலாம். அதை அவர் செல்போன் எண் மூலம் கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ளலாம்.
 
பணம் அனுப்புபவர் முதலில் பணம் பெறுபவரின் செல்போன் எண், பெயர், முகவரி போன்ற தகவல்களை வங்கியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பணம் அனுப்புபவருக்கு 4 இலக்க ரகசிய கோடு எண், மற்றும் பணம் பெறுவருக்கு 6 இலக்க ரகசிய கோடு எண் ஒன்றும், தெரிவிக்கப்படும் .
 
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எந்த ஏ.டி.எம் மையத்துக்கும் சென்று தனது செல்போன் எண், பெறப்போகும் தொகை, ரகசிய கோடு எண்கள் ஆகியவற்றை எந்திரத்தில் பதிவு செய்தால் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.