வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (15:19 IST)

எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது - நவீன் பட்நாயக் உறுதி!

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்காவிட்டாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று நவீன் பட்நாயக் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Naveen Patnaik
ஒடிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ராஜ்கங்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதலமைச்சருமான நவீன் பட்நாயக் பங்கேற்று பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மகிழ்வூட்டும் விதமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் வெளிப்படையான ஆட்சியையும், நாடாளுமன்றத்துக்கு ஏராளமான எம்.பி.க்களையும் நாங்கள் வழங்குவோம். ஒடிசாவில் எங்குமே மோடி அலை இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
 
காங்கிரசிடமிருந்தும், பாஜகவிடமிருந்தும் ஒரே சமமான தூரத்தை வரையறுத்து நாங்கள் விலகியே இருப்போம். குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளை சிறுபான்மையின மக்கள் மறந்து, பாஜகவை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் கருதவில்லை.
 
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்காவிட்டாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.