வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 8 மே 2014 (20:32 IST)

உண்மையில் மோடி டீ வியாபாரி அல்ல - சக்திசிங் கோஹில்

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் ஒரு 'டீ' வியாபாரி என்று கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் டீ வியாபாரி அல்ல என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மோடி ஒரு 'டீ' வியாபாரி அல்ல. அவர் பொழுது போக்கிற்காக டீ கடைக்கு சென்றுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் அந்த கேண்டீனை குத்தகைக்கு எடுத்திருந்தார். கஞ்சா விற்பனை செய்ததால் அந்த கடையின் உரிமம் பறிபோனது.
 
இப்படியிருக்க, டீ விற்பனை செய்ததாக மோடி பேசுவது மிகப்பெரிய பொய்யாகும். இந்த தகவலை ஒரு ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் என்னிடம் தெரிவித்தார்” என்றார்.