வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (18:40 IST)

”மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள்” - அரவிந்த் கெஜ்ரிவால்

மோடி அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
 
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் “தூய்மை இந்தியா திட்டம்” ஒன்றை அறிவித்து இருந்தார். அந்த திட்டத்தின்படி எந்த இடமும் சுத்தமாகவில்லை.
 
“தூய்மை இந்தியா திட்டம்” முழு தோல்வி அடைந்து விட்டது. மோடி அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசும்போது, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திக்கும் கருப்பு பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
 
இப்போது அது பற்றி மோடி வாய்திறப்பதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் யோகா பற்றி பேசி திரிகிறார்கள். ஆம் ஆத்மி அரசால் தில்லி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அங்கு மக்களுக்கு மின்சாரம் மானிய விலையில் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
 
தில்லியில் முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது தில்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் 70 இடங்களும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். அந்த அளவுக்கு தில்லி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெற்று உள்ளது” என்றார்.