செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 ஜூன் 2025 (17:08 IST)

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!
பெங்களூரில்  இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவரை ஆட்டோ ஒன்று லேசாக உரசிவிட்டதை அடுத்து, அந்த இளம் பெண் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரு போக்குவரத்துக்கு நெரிசலான இடம் என்ற நிலையில், பெல்லந்தூர் என்ற பகுதியில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் இளம் பெண் ஆத்திரமடைந்து, ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறு செய்தார். ஒரு கட்டத்தில், அவர் தன்னுடைய காலில் அணிந்த செருப்பை கழற்றி, ஆட்டோ டிரைவரை அடித்தார்.
 
இதைக் அந்த ஆட்டோ டிரைவர் வீடியோ எடுத்த போது, அதை தடுக்க முயற்சித்த போதிலும், ஆட்டோ டிரைவர் தொடர்ந்து வீடியோ எடுத்தார். இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ உரசி விட்டால், அதை சட்டப்படி புகார் கொடுக்கலாம்.  அதை விட்டுவிட்டு தன்னை செருப்பால் அடித்தது நியாயமற்றது அல்ல என்றும் அந்த ஆட்டோ டிரைவர் அந்த வீடியோவில்  பேசினார்.
 
கடந்த சில ஆண்டுகளாகவே, பெங்களூரில் கன்னடர்களை பிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் கீழ்த்தரமாக நடத்துவதாகவும், அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில், ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெல்லந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva