பெண்களை பயமுறுத்தி பாலியால் பலாத்காரம் செய்து வந்த ஆறு பேர் கைது


Murugan| Last Modified திங்கள், 25 ஜனவரி 2016 (13:45 IST)
இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவந்த இளம் வாலிபர்கள் ஆறு பேர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

 
கொச்சி துறைமுகத்தை சேர்ந்த ஒருவர் அப்பகுதி காவல் நிலையத்தில் ஒரு  புகார் அளித்தார். அதில் அந்தப் பகுதியை சேர்ந்த காவல் அதிகாரியின் மகன் இஜாஸ்(19), தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அவனது நண்பர்கள் ஆறு பேருடன் எனது வீட்டிற்கு வந்து மிரட்டி, எனது மனைவியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து விட்டதாக கூறினார்.
 
இதையடுத்து, இஜாஸின் நண்பர்கள் அல்தாப் (20), அமல்(19), ஜான் பிரிட்டோ (19), கிறிஸ்டி (18), கிளிப்டன் (18), சஜித் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இஜாஸ் தலைமறைவாகி விட்டான்.  இஜாஸ் உட்பட அவனது நண்பர்கள் ஏழு பேர் மீதும் கற்பழிப்பு, மிரட்டி அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட  இஜாஸை போலிசார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனான அல்தாபின் செல்போனை போலிசார் சோதனை செய்தபோது, அதில் ஒரு இளம்பெண்னை இதே கும்பல் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கும் வீடியோ இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலிசார், அவர்களிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை, அதே கும்பல் மிரட்டி கற்பழித்து, அதை வீடியோவாக எடுத்து, இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என்று மிரட்டியே அப்பெண்னை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது.
 
இவர்களுக்கு உடைந்தையாக போலிஸ்காரரின் மகன் இஜாஸ் செயல்பட்டது தெரியவந்தது. ஒரு வழக்கை விசாரிக்க மற்றொரு கற்பழிப்பு விவகாரமும் தெரிய வந்ததையடுத்து, இதுபோன்று வேறு சில பெண்கள் யாராவது இந்த கும்பலால் சீரழிக்கப்பட்டார்களா என்று விசாரணை செய்து வருகிறார்கள் 
 
தலைமறைவான இஜாஸை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இஜாஸின் தந்தை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 


இதில் மேலும் படிக்கவும் :