நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத எடியூரப்பா: இது பொய் வழக்கு என கதறல்


Caston| Last Modified செவ்வாய், 3 மே 2016 (11:14 IST)
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீதான வழக்கின் விசாரணையின் போது அவர் நீதிபதியின் முன்பு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

 
 
கல் குவாரி நடத்த அனுமதி கொடுத்ததில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது சிபிஐ நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது அவரிடம் 473 கேள்விகள் கேட்கப்பட்டன.
 
எடியூரப்பாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்ளிகளுக்கு அவர் இல்லை, தெரியாது, பொய் என தனக்கு இதற்கும் தொடர்பு இல்லாத விதத்திலேயே பதில் அளித்தார். இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று நீதிபதி கேட்டதும் எடியூரப்பா கண்ணீர் விட்டு அழுதார்.
 
இது பொய் வழக்கு, எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக செயல்பட்டதோ, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தவோ யோசித்ததே இல்லை. என்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டவே இப்படி வழக்கு போட்டிருக்கிறார்கள் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார் எடியூரப்பா. பின்னர் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :