1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. XChat is Now Available on iPhone and iPad: How to Download and Use the New Secure Messaging App

XChat இப்போது ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில்: டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படி?

எக்ஸ்-சாட்
X நிறுவனம் தனது புதிய தகவல் பரிமாற்ற செயலியான XChat ஐ ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, விளம்பரங்கள் அற்ற மற்றும் Tracking இல்லாத பாதுகாப்பான உரையாடலை உறுதி செய்கிறது.
 
இந்த செயலி End-to-end encryption வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் உரையாடல்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், அனுப்பிய செய்திகளை எடிட் செய்யும் வசதி, தானாகவே மறையும் செய்திகள் , மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உங்கள் தற்போதைய எக்ஸ் கணக்கின் மூலமே நேரடியாக லாக்-இன் செய்து கொள்ளலாம் என்பதால், புதிதாக தொடர்புகளை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
 
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 'XChat' என தேடி, X Corp)வெளியிட்டுள்ள செயலியை தேர்ந்தெடுத்து 'Get' பொத்தானை அழுத்தி நிறுவலாம். நிறுவிய பின், உங்கள் எக்ஸ் கணக்கு விவரங்களை உள்ளிட்டு, Security PIN ஒன்றை அமைப்பதன் மூலம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை தொடங்கலாம்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
முடியல!. ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை!.. டிரம்ப் விரக்தி!...