5 நாட்களில் 25 விமானங்களில் வந்த பொருட்கள்! – கைகொடுக்கும் உலக நாடுகள்!

Oxygen Truck
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 4 மே 2021 (08:49 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு உதவ கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் மருத்துவ பொருட்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா பாதிப்பில் உதவ பல்வேறு நாடுகளும் முன் வந்தன. அதன்படி உலகம் முழுவதும் பல நாடுகள் இந்தியாவிற்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக அனுப்பி வருகின்றன.

கடந்த 5 நாட்களில் இந்தியாவிற்கு 25 விமானங்கள் மருந்து மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 300 டன்கள் அளவிற்கு இறக்குமதியான பொருட்களில் 5,500 ஆக்ஸிஜன் சுத்திகரிப்பான்கள், 3,200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வந்தடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :