வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (18:31 IST)

போதைப் பொருட்களால் பெண்கள் அதிகம் பாதிப்பு - நந்திதா தாஸ்

ஆண்கள் பலர் போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நந்திதா தாஸ் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
 

 
பஞ்சாப் மாநிலம் அஞ்நலா நகர் அருகில் உள்ள ஜெகதேவ் கலன் கிராமத்தில் நடந்த ஒரு விழாவிற்கு பிரபல நடிகையும், இயக்குனருமான நந்திதா தாஸ் தலைமை தாங்கினார்.
 
அப்போது அவர் பேசுகையில், ”பஞ்சாப் மாநிலத்தில் பலர் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கலாச்சாரமும், பண்பாடும் அதிகம் கொண்ட பஞ்சாப் சீரழிந்து வருகிறது.
 
போதைப் பொருட்கள் பழக்கத்தை ஒழித்து அதன் கலாச்சார பெருமையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். போதைப் பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாப்பை மாற்ற வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும்.
 
குறிப்பாக சமூக தீமைகளை ஒழிப்பதில் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சினிமா தயாரிப்பாளர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான, சமூக நன்மைக்கான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.