பஸ்ஸில் ஓடிய திலீப் படம்!. கோபமான பெண்!.. கேரளாவில் களேபரம்....
சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி சிலர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் நாட்டை உலுக்கியது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் திலீப் என சொல்லப்பட்டது. போலீசார் திலீப் மீது முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சில மாதங்கள் சிறையில் இருந்தார் திலீப். மேலும், அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ந்து கூறி வந்தார்.
கடந்த பல வருடங்களாகவே இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் திலீப்புக்கு எதிரக போலீசார் சரியான ஆதாரத்தை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அந்த வழக்கிலிருந்து அவரை கேரள நீதிமன்றம் விடுதலை செய்தது. அதேநேரம் அதில் தொடர்புடைய ஆறு பேருக்கு 20 ஆண்டுகள் கடும் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் திருவனந்தபுரத்திலிருந்து தொட்டில் பாலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் திலீப் நடித்த பறக்கும் தளிகா படம் ஒளிபரப்பானது. அதை பார்த்த ஒரு பெண் பயணி இவரின் படத்தை பேருந்தில் போடக்கூடாது என சண்டை போட படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த சில ஆண்கள் அந்த பெண் பயணியுடன் சண்டை போட களேபரமானது. திலீப் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்துக்கு பின் இந்த விவகாரம் கேரளாவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.