கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மரணமா? அதிர்ச்சி தகவல்!

Last Updated: சனி, 23 ஜனவரி 2021 (13:30 IST)

குர்கானில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

குர்கானைச் சேர்ந்த ராஜ்வதி
என்ற
56 வயது சுகாதாரப் பணியாளர்கள் ஜனவரி 16 அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மரணத்துக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் சுகாதாரத்துறை அதை மறுத்துள்ளது. அவரின் உடல் திசுக்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அவரது குடும்பத்தினர் இறப்பதற்கு ஒரு நாள் முன்புவரை அவர் நன்றாகதான் இருந்ததாகவும், அவரின் மரணத்துக்குக் கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று சொல்லி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :