1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2015 (14:09 IST)

ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதில் பெண் மரணம்

டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டதில் தனது மகன் - மகள் கண் எதிரில் சக்கரத்தில் சிக்கி அவர் பலியானார்.
 
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து ஷாஜபூருக்கு மால்வா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. பெர்சாரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் ஏறினார்கள்.
 
பொதுப் பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஓம்குமாரி தெம்ரே என்ற பெண் தனது மகன் மற்றும் 2 மகள்களுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினார். அவர்களுடன் மேலும் சில பயணிகளும் ஏறினார்கள்.
 
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அவர்களை கீழே இறங்குங்கள் என்று சத்தம் போட்டார். இந்த சமயத்தில் ரயில் மெதுவாக புறப்பட்டது. ஓம் குமாரி செய்வதறியாது ரெயில் பெட்டியின் வாசல் அருகே தனது குழந்தைகளுடன் நின்று இருந்தார்.
 
அவர்களை நோக்கி வேகமாக வந்த டிக்கெட் பரிசோதகர் இன்னும் இறங்கவில்லையா? என்று கூறி அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.
 
இதில் அந்தப் பெண் தண்டவாளத்தில் விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி அடிபட்டு இறந்தார். மகன் – மகள்கள் கண் எதிரில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.
 
இதன் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.