லாட்ஜ் 4வது மாடியில் 7 நண்பர்களுடன் இளம்பெண் விருந்து.. போலீஸ் வந்ததால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!
பெங்களூருவில் அதிகாலை நடந்த அதிகாலை விருந்தின்போது, போலீஸ் வந்ததால் பீதியடைந்த 21 வயது இளம்பெண் ஒருவர், ஹோட்டல் பால்கனியிலிருந்து வடிகால் குழாய் வழியே தப்ப முயன்றபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவரது தந்தையின் புகாரின்படி, மகள் தனது ஏழு நண்பர்களுடன் 'சீ எஸ்டா லாட்ஜ்' ஹோட்டலில் மூன்று அறைகளை முன்பதிவு செய்து, அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சத்தம் காரணமாக உள்ளூர்வாசிகள் 112 உதவி எண்ணுக்கு அழைத்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குழுவினரை கண்டித்த பிறகு, அந்த பெண் பீதியடைந்து நான்காவது மாடியில் இருந்த பால்கனியிலிருந்து வடிகால் குழாய் வழியே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்துள்ளார். அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹோட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக பால்கனியில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறி, லாட்ஜ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva