ஆம்புலன்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை முயற்சி!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (12:54 IST)
கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக செல்லும் போது ஆம்புலன்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை முயன்றுள்ளார்.  
 
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
ஏற்பாட்டின் படி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.  
 
இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்தார். அந்த பெண் நடந்ததை தனது சிகிச்சை கொடுக்க வந்த மருத்துவரிடம் இதைப்பற்றி கூற இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், நேற்று அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வார்டில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். ஆனால், கதவை உடைத்துக்கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :