1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (08:37 IST)

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா? தலைவர்கள் ஆலோசனை!

கொரோனா வைரஸால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பை அடுத்து கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடாளுமன்றம் பின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடப்பது வழக்கம். ஆனால் இம்முறை அந்த கூட்டத்தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக மக்களவையின் தலைவரான ஓம் பிர்லாவும், மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடுவும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.

கொரோனாவுக்குப் பின் அரசு சம்மந்தமாக கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடக்கும் நிலையில்  நாடாளுமன்றத்தையும் அதுபோல நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படியே நடத்தினாலும் அதன் பாதுகாப்பு தன்மை எப்படி இருக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.