வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: ஞாயிறு, 4 மே 2014 (18:29 IST)

பாஜக-வுடன் ஒருபோதும் கூட்டனி இல்லை - மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டாணி இல்லை என்று  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
ஹூக்ளி மாவட்டத்தில் ஸ்ரிரம்போரே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட  நரேந்திர மோடி, பிற மாநிலங்களில் இருந்து மேற்குவங்காளத்திற்கு வந்து வசிக்கும் மக்களை மம்தா பானர்ஜி விரும்பவில்லை, ஆனால் வங்கதேசத்தில் இருந்து மக்கள் வரும்போது அவருடையை முகம் பிரகாசமாகிறது என்று பேசியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, 'மேற்கு வங்கத்தில் சில அரசியல் கட்சிகள் கலகங்களை தூண்டிவிட விரும்புகிறது. 
 
மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் மக்களை பிரிக்க விரும்புகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் மேற்கு வங்கத்தில் வசிக்கின்றனர். அவர்களை நாங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் போல தான் கருதுகிறோம். 
 
நாங்கள் மக்களை மதம், ஜாதி, மொழி போன்ற  வேறுபாடுகளை வைத்து பிரித்து பார்ப்பதில்லை. நாங்கள்  ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என அவர் பேசினார்.