வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 11 ஜூலை 2015 (01:46 IST)

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்: நிதிஷ்குமார் - பாஜக போட்டி போட்டு அறிவிப்பு

பீகாரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று தற்போதையை  முதலமைச்சர் நிதிஷ்குமாரும், அடுத்து ஆட்சி அமைக்க துடிக்கும் பாஜகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
 

 
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
 
ஆனால், பீகாரில் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று பாஜக களத்தில் குதித்துள்ளது.
 
இந்நிலையில், பொது மக்களின் மனம் குளிர்ந்தால், அவர்களது அனைத்து வாக்குகளும் தனக்கே கிடைக்கும் என கணக்கு போட்டு, பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமார் அதிரடியாக ஒரு ஆயுத்தை கையில் எடுத்து வீசியுள்ளார்.
 
அது என்ன வென்றால், நான் மீண்டும் முதலமைச்சராக வரும் பட்சத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
 
நிலைமை, நிதிஷ் குமாருக்கு சாதமாக அமைவதை கண்ட பாஜகவும், பூரண மதுவிலக்கை பாஜகவும் அமுல்படுத்தும் என இதே கோரிக்கையை கையில் எடுத்துள்ளது. இதனால் பீகார் சட்ட மன்ற தேர்தலில் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.