1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (19:49 IST)

ஒரு காட்டுபன்றியை சுட்டுக் கொல்ல 100 குண்டுகளை பயன்படுத்திய போலீசார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு காட்டுப்பன்றியை  சுட்டுக் கொல்ல 100 குண்டுகளை போலீசார் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சத்தீஸ்கர் மாநிலம் மகாசாமந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுபகுதியில் ஒட்டிய கிராமம் உள்ளது. இங்கு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, அந்த கிராமத்திலிருந்து இரண்டு பேர் சில பூக்களை பறிக்க காட்டுக்குள் சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வரவே இல்லை.
 
இதனையடுத்து சிலர் காட்டுக்குள் சென்று அவர்களை தேடியுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். காட்டுப்பன்றி அவர்களை கொன்றிருப்பது தெரிய வந்தது. எனவே அந்த காட்டுப்பன்றியை பிடிக்கும்படி அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். 
 
இதையடுத்து, களத்தில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள், அந்த பன்றியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த பன்றியின் தாக்குதலில் ஒரு அதிகாரியும் மரணமடைந்தார். இதனால் அந்த பன்றியை சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்பட்டது.
 
வனத்துறை அதிகாரிகளுடன், போலீசாரும் சேர்ந்து அந்த பன்றியை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். 10 போலீசார் சேர்ந்து சுமார் 100 துப்பாக்கி குண்டுகள் வரை பயனபடுத்தி அந்த பன்றியை சுட்டுக் கொன்றனர். அவர்களின் தாக்குதலில் 16 குண்டுகள் அந்த பன்றியின் உடலை துளைத்து எடுத்தது.